Home / இன்றைய செய்திகள் / சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச் சென்ற பெண் கைது!

சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச் சென்ற பெண் கைது!

மஹர சிறைச்சாலை கைதியொருவருக்கு வழங்குவதற்காக, காற்சட்டையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 2 போதை மருந்து பாக்கெட்டுகளை எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹர சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) காலை கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய கைதியொருவரின் மனைவி என தெரிவிக்கப்படும் பெண் ஒருவரால் இவ்வாறு போதைமருந்து பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருட்டு வழக்கு ஒன்றில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் விடுதலை பெற்றுக் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரான பெண் போதைமருந்து பாக்கெட்டுகளுடன் ராகமை பொலிஸில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மஹர சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: