Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோட்டை நீதவானின் வீட்டிலும் யானை: ஐ.தே.க. சபையில் தெரிவிப்பு!!

கோட்டை நீதவானின் வீட்டிலும் யானை: ஐ.தே.க. சபையில் தெரிவிப்பு!!

1கோட்டை நீதவானின் வீட்டிலும் யானை இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன்  சபையில்  தெரிவித்தார்.





நீதவானின் வீட்டில் அல்ல யாருடைய வீட்டிலும் சட்டவிரோதமான முறையில் யானையை வைத்திருக்க முடியாது. 





சட்டவிரோதமான முறையில் யாருடைய வீட்டில் இருந்தாலும் இரண்டொரு வாரங்களுக்குள் கைப்பற்றுவேன் என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.





எதிர்க்கட்சியின் சவாலை ஏற்றுக்கொண்ட அமைச்சர், சட்டவிரோதமான முறையில் யானைகள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை தருமாறு கோரினார்.





இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: