Home / இன்றைய செய்திகள் / கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவரும் ரஸ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை 1926 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: