Home / இன்றைய செய்திகள் / கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை 1875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 28 பேர் இன்றைய தினம் (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1150 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 713 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: