Home / இன்றைய செய்திகள் / குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு வீடு!!

குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு வீடு!!

கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக கடற்படை மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட முழுமையான வீடு ஒன்று வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியால் அண்மையில் தலைமன்னார், ஊருமலை பகுதி சேர்ந்த ஒரு குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த சமூக பொறுப்புணர்வுக்கான நிதி உதவியை தலைமன்னர் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவர் திருமதி. பாக்யா வீரவர்தன உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் உதவியின் கீழ் குறித்த வீட்டின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வுக்காக வடமத்திய கடற்படைக் கட்டளையின் துணைத் தளபதி உட்பட அதிகாரிகள், தலைமன்னர் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவர் திருமதி. பாக்யா வீரவர்தன மற்றும் கட்டளை சிவில் பொறியியல் துறையைச் சேர்ந்த கடற்படையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: