Home / செய்திகள் / இந்திய செய்திகள் / காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் மோடி கோஷம்: ராகுல் கடுப்பு!!

காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் மோடி கோஷம்: ராகுல் கடுப்பு!!

1801049520Untitled-1காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த ஒரு குழுவினர் மோடியை ஆதரித்து ‘ஹர ஹர மோடி’ என்று கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் டியோரியாவில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், மோடியை வாழ்த்தி ‘ஹர ஹர மோடி’ என்று கோஷமிட்டனர்.

இதனால் ராகுல் காந்திக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே பொலிசார் கூட்டத்திற்குள் சென்று அந்த கும்பலை அப்புறப்படுத்தினர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச வீடு, இலவச மருத்துவம், ரேஷனில் கிலோ ஒரு ரூபாய் விலையில் அரிசி மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் நரேந்திர மோடி மீது வழக்கமாக கூறும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். மோடி பிரதமராக வந்தால் அவரது தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் ராகுல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: