Home / இன்றைய செய்திகள் / கழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்!!

கழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்!!

மனைவியின் கழுத்தை கயிற்றால் திருகியதால் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (03) மாலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே சம்பவதினமான நேற்று (03) பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில் மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால் திருகியதனால் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 27 வயதுடைய ஹலால் என்ற கணவனை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: