Home / இன்றைய செய்திகள் / கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி குறித்த பகுதியில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

இன்று இனங்காணப்பட்ட பெண் அலுத்கம பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் களுத்துறை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் வெலிகந்த கொவிட் சிகிச்சை வைத்தியசாலைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: