Home / செய்திகள் / ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூர்

002gஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. மழை காரணமாக ஆட்டம் 1 மணி 10 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் பீட்டர்சன் முதலில் பெங்களூர் அணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் 22 ரன்னிலும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 10 ரன்னிலும், பார்த்தீவ் பட்டேல் 29 ரன்னிலும் (28 பந்து) குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் டிவில்லியர்சுடன், யுவராஜ்சிங் கைகோர்த்தார். டிவில்லியர்ஸ் தனது பங்குக்கு 17 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை போன்று, இந்த மோதலிலும் யுவராஜ்சிங் விசுவரூபம் எடுத்தார். இம்ரான் தார் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விரட்டிய யுவராஜ்சிங், தொடர்ந்து எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தார்.

மழை தூரல் ஓய்ந்த பிறகு, யுவராஜ்சிங் பேட் சிக்சர் மழையை கொட்டியது. இதனால் இறுதி கட்டத்தில் மைதானத்தில் எங்கும் ‘யுவி’ ஆரவாரமே ஒலித்தது. எந்த பந்து வீச்சாளரையும் விட்டுவைக்காத யுவராஜ்சிங், ராகுல் சுக்லாவின் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 மெகா சிக்சர்களை அடித்து பரவசப்படுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. யுவராஜ்சிங் 9 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 68 ரன்கள் (29 பந்து) விளாசி களத்தில் நின்றார். இந்த தொடரில் அவரது 3-வது அரைசதம் இதுவாகும். சச்சின் ராணா 15 ரன்கள் எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூர் அணி 78 ரன்களை திரட்டியது.

பின்னர் 187 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடக்க வீரர்களாக விளையாடிய விஜய் மற்றும் டி காக் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக விளையாட தவறியதால் டெல்லி அணி தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக டுமினி 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: