Home / இன்றைய செய்திகள் / உஷ்ணத்தில் இருந்து பாதுகாப்பு பெறுமாறு ஆலோசனை!!

உஷ்ணத்தில் இருந்து பாதுகாப்பு பெறுமாறு ஆலோசனை!!

செப்டெம்பர் 8 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதால் நாட்டின் பல பகுதிகளில் கடும் உஷ்ணமான வானிலை நிலவும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, அபாயத்தைக் குறைக்க சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுள்ளது.

அதிகப்படியான வெப்பத்தால் நீரிழப்பு ஏற்படுவதால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும் எனவும் இது தசை பிடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகள் அதிக வெப்பநிலையில் வியர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதால் அவர்களின் உடல் வெப்பநிலையை பேணுவதில் சிரமம் ஏற்படலாம் மற்றும் பக்கவாதம் உருவாகலாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

திறந்த வெளிகளில் பணிபுரிவோர் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், முடிந்த வரை நிழலான இடங்களில் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுள்ளது.

சூடான பகுதிகளில் வசிக்கும் வயதானவர்கள் அல்லது நோய் வாய்ப்பட்டவர்கள் குழந்தைகள் வாகனங்களில் பயணிக்கும் போது அல்லது எந்த காரணத்திற்காகவும் தற்போதைய உஷ்ண நிலைமை குறித்து அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளது.

அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு பெற முடிந்த வரை வெள்ளை நிற ஆடைகளை அணிவது நல்லது என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: