Home / இன்றைய செய்திகள் / உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

தற்போதைய சூழலில் நீதித்துறையின் ஆலோசனைகளை பெற முடியாத நிலையில் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு பாராளுமன்றம் மீள கூட்டப்படுமானால் அதனை ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்க செல்ல கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை பெற்று அதனை தொடர்ந்தும் ஆறு வருடங்களுக்கு நடத்தி செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் இருக்கும் போது பாராளுமன்றத்தை மீள கூட்டமாட்டோம் என அடம் பிடிப்பது விதண்டாவாதமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி விடாப்பிடியாக இருப்பது ஜனநாயக பண்புகளுக்கு முற்றிலும் விரோதமானது எனவும் அரவிந்தகுமார் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: