Home / செய்திகள் / உலகசெய்திகள் / ஈராக் குண்டுவெடிப்புகளில் 28 பேர் பலி!!

ஈராக் குண்டுவெடிப்புகளில் 28 பேர் பலி!!

1(4811)ஈராக்கின் பாக்தாத் நகரில் இன்று(13) இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சதார் நகரத்திற்கு அருகில் காலை நேரத்தில் மக்கள் அதிகமாக இருந்த இடத்தில் கார்குண்டொன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும் மக்கள் குடியிருப்புகள் இருந்த இடத்தில் கார்குண்டு வெடித்ததில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் பாக்தாத்தின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஜமிலா மாவட்டத்தில் வெடித்த குண்டில் 3 பேர் பலியானதுடன் 10ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

போக்குவரத்து பொலிஸாரின் அலுவலகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதலில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் பலியானதுடன் 7 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாதில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் சம்பவமாக இது காணப்படுவதுடன் நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஒன்றாக இச்சம்பவம் அமைவதாக ஈராக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2(2915)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: