Home / இன்றைய செய்திகள் / இலங்கையில் மேலும் ஒருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஜா-எல, சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஒலுவில் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க உட்படுத்தப்பட்டு உள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேலும் ஒருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 105 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: