Home / இன்றைய செய்திகள் / இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்!!

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து வந்த 2 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,162 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (11) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 176 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் – 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: