Home / இன்றைய செய்திகள் / இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் ஒரு கொவிட் 19 தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவருடன் நெருங்கிய பழகிய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுரைச்சோலையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2731 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 656 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: