Home / இன்றைய செய்திகள் / இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1471 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 716 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: