Home / இன்றைய செய்திகள் / இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1200ஐ கடந்தது !!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1200ஐ கடந்தது !!

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1200 ஐ கடந்துள்ளது.

இன்று பிற்பகல் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1201 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 479 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: