Home / இன்றைய செய்திகள் / இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா !!

இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாட்டில் இதுவரை 310 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். .

இதேவேளை மேலும் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இதுவரை 102 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது 201 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 100 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: