Home / இன்றைய செய்திகள் / இதுவரை 1711 பேர் பூரண குணம்!!

இதுவரை 1711 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1711 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 836 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரை நாட்டில் 2042 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: