Home / இன்றைய செய்திகள் / இடுகம நிதியத்தின் மீதி 1,567 மில்லியனாக அதிகரிப்பு !!

இடுகம நிதியத்தின் மீதி 1,567 மில்லியனாக அதிகரிப்பு !!

தனிப்பட்ட நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ´இடுகம´ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,567 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தனுக்க நதிரங்க 2,500 ரூபாவையும் சட்டத்தரணி எஸ்.கே.டப்ளியு. குணவர்தன 50,000 ரூபாவையும் எல்.என்.கே.பி. ஜயக்கொடி 1,000 ரூபாவையும் செல்வன் டப்ளியு.டி. தெவிதுனு சாமிக்க 603 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

குறித்த அன்பளிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

கொரியாவில் இருந்து வருகை தந்துள்ள இலங்கையர்கள் சிலர் 112,800 ரூபாவையும் சிசிர குணதிலக்க 25,000 ரூபாவையும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் 473,870.82 ரூபாவையும் பிரியந்த கலுபோவிலகே 15,000 ரூபாவையும் அனுராதபுரம் மாவட்ட செயலகம் 696,297.01 ரூபாவையும் இலங்கை தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் திருமதி. கே. திசாநாயக்க 177,000 ரூபாவையும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் திரு.யு.எச். பலிகக்கார 50,000 ரூபாவையும் நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர் திரு.வி. கனகசபாபதி 50,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,567,551,476.66 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: