Home / இன்றைய செய்திகள் / இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி 1,213 மில்லியனாக அதிகரிப்பு!!

இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி 1,213 மில்லியனாக அதிகரிப்பு!!

தனிப்பட்ட,நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,213 மில்லியனாக அதிகரித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தில் அரச சேவை ஊழியர்கள் அன்பளிப்பு செய்த 25 மில்லியன் ரூபாவை ஆளுநர் மஹீபால ஹேரத் அவர்கள் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

கிரிபத்கொட விகாரமகா தேவி பழைய ஆசிரியர் சங்கத்தினர் ஒரு லட்சம் ரூபாவை ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலேவிடம் கையளித்தனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (பாதுகாப்பு அமைச்சு) 2,47,538 ரூபாவையும், Tharuni Merine Enterprices நிறுவனம் 05 லட்சம் ரூபாவையும், Hirushi Merine Enterprices நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும்,வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய கிரிந்திவெல சோமரத்ன தேரர் 61,000 ரூபாவையும், தியகம தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த டீ.பிரியன்த சமரகோன் 25000 ரூபாவையும், ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்தவர்கள் 825000 ரூபாவையும், அமெரிக்காவில் வசிக்கும் திருமதி சுவர்ணா எஸ். சிறிவர்த்தன 1,099, 668 ரூபாவையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 05 லட்சம் ரூபாவையும், கல்வி அமைச்சின் திட்ட முகாமைத்துவ பிரிவு 1,013,174 ரூபாவையும், Slim Phamaceuticals (pvt) ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: