Home / இன்றைய செய்திகள் / அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 50 இலங்கையர் நாடு திரும்பினர்!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 50 இலங்கையர் நாடு திரும்பினர்!!

இலங்கைக்கு வருகை தர முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 50 இலங்கையர் இன்று (21) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுள் அதிகமானவர்கள் உயர் கல்விக்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் தற்காலிக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: