Home / இன்றைய செய்திகள் / அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகழிடம் என்பதை நிரூபித்து விட்டார் சுமந்திரன்!!

அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகழிடம் என்பதை நிரூபித்து விட்டார் சுமந்திரன்!!

வடக்கில் ஒரு கதை தெற்கில் இன்னொரு கதை தமிழில் ஒன்று சிங்களத்தில் வேறொன்று என இன விடுதலை அரசியலை சுமந்திரன் வணிகமாக்கி விட்டார்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (12) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

தமிழ் மக்களின் சுவாசமாக இருக்கும் தலைவர் பிரபாகரனிசத்தை எள்ளி நகையாட கொள்ளிவால் பேயாகவுள்ள சிங்களத்தின் எடுபிடி கைக்கூலி வழிப்போக்கன் சுமந்திரனுக்கு, என்ன அருகதையுண்டு.

சிங்களவர்களோடு சுகபோகத்தை அனுபவித்து விட்டு, சந்தர்ப்ப வாதி சம்மந்தனின் கையாளாக உட்புகுந்து முதுகெலும்பில்லாத மாவை சேனாதிபதியாலும் வக்கற்ற பங்காளிக் கட்சிகளாலும் திறனற்ற சக பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒட்டு மொத்த பல வீனத்தின் மொத்த வடிவமே சுமந்திரனின் நிரலான தமிழ்த்தேசிய நீக்கவாதங்கள்.

பிரபாகானிசமே புலியிசம் புலியிசவாதத்தின் நீட்சியே இன்றைய தமிழ்த் தேசிய வாதம் வரையறுக்க முடியாத எண்ணிலடங்காத செயற்கரிய செயலாற்றிய விடுதலை வீரர்களை இகழ்ந்துரைக்க எட்டப்பன்களால் எப்படி முடியும்.

இதற்குப் பின்னும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பார்களானால் அவர்கள் தமிழர்கள் இல்லை.

தமிழர் தாயகத்தில் வசிக்க தகுதி அற்ற துரோகிகளாகவே கருதப்படுவார்கள்.

காலத்திற்கு காலம் சந்தர்ப்பவாதிகளும் போக்கிலிகளும் தமிழ் தரப்பில் தோன்றிய வண்ணமே உள்ளனர்.

இடத்திற்கு ஏற்ற மாதிரி பச்சோந்தித்தனமாக அங்கிடுதட்டி போல் மாற்றி மாற்றி பேசுவதில் அரசியல் கோமாளி ஆகிவிட்டார். வடக்கில் ஒரு கதை தெற்கில் இன்னொரு கதை தமிழில் ஒன்று சிங்களத்தில் வேறொன்று என இன விடுதலை அரசியலை வணிகமாக்கிவிட்டார்.

அதுமட்டுல்ல கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசுக்கட்சியில் இருந்தும், பலர் வெளியேறக் காரணமும் இவரின் தான்றோன்றித்தனமே ஆகும்.

இதற்கு எல்லாம் எப்போதும் ஆதரவு கொடுக்கும் தமிழ்த்தேசியத்தில் தூய விசுவாசமற்ற சம்மந்தனின் ஆசீர்வாதமே ஆகும்.

சுமந்திரனின் தறி கெட்ட ஆணவ சதிராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் ஊழ்வினை உறுதி வந்தூட்டுகிறது அறம் ஒரு போதும் அகன்று போக விடாது என்பதை இவர் விரைவில் உணர்வார்.

சுமந்திரன் பல வருடங்களாகவே புலி நீக்க அரசியல் செய்து வருகிறார். இவ்வளவு நாளும் வேடிக்கை பார்த்த ஏனைய பாராளுமன்ற ஊறுப்பினர்கள் தற்போது சினங் கொள்வது தேர்தல் காச்சலே மாவைக்கு கூட முதுகெலும்பு வந்துவிட்டதோ தற்போது என எண்ண தோன்றுகின்றது. எல்லாம் அரசியல் நாடகமே.

ரணிலோடு தமிழ்த்தேசிய நீக்கத்தில் ஈடுபட்டு சிங்களவரை விசுவாசப்படுத்தியவர்.

தற்போது மகிந்த ஆட்சியோடு இணைந்து மீதமாக உள்ளவற்றையும் அழிப்பார் என்பதே சர்வ நிச்சயம்.

மக்களுக்காக கட்சியா? கட்சிக்காக மக்களா? விடுதலைக்காக மக்களா? மக்களுக்காக விடுதலையா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பு.

சுமந்திரனின் அடாவடித்தனத்தை தமிழரசுக்கட்சியோ, கூட்டமைப்போ ஒரு போதும் கட்டுப்படுத்தாது.

எல்லோரும் கூட்டுக்கள்ளர்கள் சுமந்திரனில் இவர்கள் எல்லாம் தங்கி வாழ்பவர்கள் அடிமைகளிடம் நீதியை எதிர் பார்க்க முடியுமா?

ஆதாயச்சூதாடிகளை வீட்டிற்கு அனுப்ப வரும் தேர்தலில் அரசியல் பாடம் புகட்டுங்கள். இல்லா விட்டால் இவர்களை அகற்றவே முடியாது மக்கள் மன்றிலே நீதியின் செங்கோல் செய்வீர்களா?என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: